வெளிநாட்டு பணிப்பெண்கள், பிற Work permit உடையோருக்கு ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!

migrant-domestic-workers mental-distress
(Photo: TRT World and Agencies)

வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் பிற Work permit அனுமதி வைத்திருக்கும் பெண்களுக்கான ஆறு மாத மருத்துவப் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது கோவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

பொது மருத்துவ கிளினிக்குகள் மற்றும் பாலிகிளினிக்குகளில் அதிகரித்து வரும் நோயாளிகளின் சுமை மற்றும் அழுத்தத்தைக் குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று மனிதவள அமைச்சகம் புதன்கிழமை (மார்ச் 2) தெரிவித்துள்ளது.

ஜனவரி – பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நோட்டீஸ் பெற்று தங்களுடைய ஊழியர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாத முதலாளிகள் ஏப்ரல் 30 வரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத நோட்டீஸ்களுக்கு, ஏப்ரல் மாத இறுதியில் தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.

S Pass, Employment Pass தகுதி சம்பள உயர்வு… வெளிநாட்டு ஊழியர்களின் கட்டாய சம்பள உயர்வுக்கு வழிவகுக்குமா?