கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு ஊழியர்கள் கைது

Google Maps

சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 16 முதல் 21 வயதுடைய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

பேஃப்ரன்ட் அவென்யூவில் 20 வயது இளைஞருக்கும், அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட குழுவிற்கும் இடையே செப். 24 அன்று காலை 6 மணியளவில் சண்டை நடந்ததாகக் கூறப்படும் வழக்கு குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சிங்கப்பூரில் அதிக தொடக்க சம்பளத்தை விரும்பும் ஊழியர்கள்!

20 வயதுடைய இளைஞரின் கைகளிலும் முகத்திலும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்ததாகக் கூறப்படும் சச்சரவை தொடர்ந்து இந்த தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் இரண்டு மணி நேரத்திற்குள் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

குற்றவியல் சட்டம் 1871 பிரிவு 147ன் கீழ் கலவரம் செய்த குற்றத்திற்காக ஆறு பேர் மீதும் நேற்று செப். 25 அன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுமபட்டது.

கலவரத்தில் ஈடுபடும் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

பெரிய அளவில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட போகிறார்களா..? – விளக்கும் நிறுவனம்