கருணைக் கொலை செய்யப்பட்ட குட்டி விலங்கு! – பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் Civet வகை விலங்கு!

சிங்கப்பூரின் குயீன்ஸ்டவுன் பகுதியில் உள்ள காப்பிக்கடையின் கூரையில் தங்கியிருந்த civet என்ற குட்டி விலங்கு கருணைக் கொலை செய்யப்பட்டது.இந்த காப்பிக்கடையானது ஸ்டார்லிங் சாலை,பிளாக் 49-இல் செயல்பட்டு வருகிறது.

கடையின் கூரையில் இருந்த விலங்கு குறித்து சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன.குட்டி விலங்கு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததாக இணையத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

Civet வகை விலங்குகள் இந்தோனேசியாவில் kopi luwak எனும் விலை உயர்ந்த காப்பி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.விலங்கு காப்பிக் கடையில் இருப்பது நகைச்சுவையாக இருப்பதாகவும் சிலர் கூறினர்.

இந்த வகை விலங்குகள் பொதுவாக மரங்கள் போன்ற உயரமான இடங்களில் வசிக்கும்.தேசியப் பூங்காக் கழகத்தின் அதிகாரிகள் உதவியுடன் கடையிலிருந்த குட்டி விலங்கை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அது கடையில் பல்வேறு தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும் உடல்நிலை மோசமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.எனவே,கருணையின் அடிப்படையில் விலங்கு கொல்லப்பட்டது.இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.