பறிபோன வேலை! – மெட்டாவில் நீக்கப்பட்ட பணியாளர்கள் LinkedIn-இல் குமுறல்! -பாதிக்கப்பட்ட 10 சிங்கப்பூரர்கள்!

pc-mothership
உலகின் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான Meta நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் சுமார் 11,000 பேர் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இதன் தாய் நிறுவனமான Facebook-இல் 87,000 பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களில் 13 சதவீதம் பேர் குறைக்கப்படுவார்கள்.தற்போது வரை பணிநீக்கங்களால் சிங்கப்பூரில் இதுவரை குறைந்தது 10 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மெட்டாவின் சிங்கப்பூர் அலுவலகத்தில் 2018 இல் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர்.தற்போதைய விவரம் தெரியவில்லை.
சிங்கப்பூர் அலுவலகத்தில் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பணிநீக்கம் குறித்து மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் LinkedIn-இல் தெரிவித்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் #metalayoffs என்ற ஹேஷ்டக் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவு வழங்குபவர்களால் பகிரப்பட்டு வருகிறது.

கேமிங் பிரிவில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்,நான்கு ஆண்டுகள் மெட்டாவில் பணிபுரிந்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி நீக்கப்பட்டுள்ளனர்.ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சமீபத்தில் வேலைகளை குறைத்து வருகின்றன