உக்ரைனுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தல்!

Photo: Changi Airport

உக்ரைன் (Ukraine) நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைனுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

‘டோங்கோ நிவாரணப் பணிகளுக்கு 50,000 அமெரிக்க டாலரை வழங்கும் சிங்கப்பூர்’!

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry of Foreign Affairs, Singapore) இன்று (26/01/2022) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “உக்ரைன் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் உருவாகி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உக்ரைனுக்கான அனைத்துப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அறிவுறுத்துகிறது.

உக்ரைனில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் அழுத்தமாக அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் உடனடியாக https://eregister.mfa.gov.sg என்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதள பக்கத்தில் இ- பதிவு செய்ய வேண்டும்.

சீனப் புத்தாண்டையொட்டி, ‘MyIndia’ வழங்கும் அதிரடி ஆஃபர்!

உக்ரைனில் சிங்கப்பூர் தூதரகம் இல்லை. தூதரக உதவி தேவைப்படும் உக்ரைனில் உள்ள சிங்கப்பூரர்கள் 24 மணிநேரமும் செயல்படும் +65- 6379- 8800, +65- 6379- 8855 (அல்லது) ஃபேக்ஸ் +65- 6476- 7302 என்ற வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.