கெந்திங் மலை அருகே நிலச்சரிவு: மூன்று சிங்கப்பூரர்களை மீட்ட மலேசிய அதிகாரிகள்!

Photo: Malaysia Prime Minister Official Twitter Page

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் கெந்திங் மலைக்கு (Genting Highlands) அருகே உள்ள கோத்தோங் ஜெயா (Gohtong Jaya) வட்டாரத்தில் உள்ள முகாமுக்கு அருகே டிசம்பர் 16- ஆம் தேதி அன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து மலேசிய நாட்டு காவல்துறை, தீயணைப்புத்துறையினர், மீட்புப் படையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரு நாட்டிற்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16- ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டதில் 17 பேர் காணவில்லை என்றும், சுமார் 50- க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், சம்பவ நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ள அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிசம்பர் 16- ஆம் தேதி அன்று மலேசியா நாட்டின் கெந்திங் ஹைலேண்ட்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து முறையே மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் மலேசிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் (Minister of Foreign Affairs Datuk Seri Zambry Abdul Kadir) ஆகியோருக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் கடிதம் எழுதியுள்ளனர்.

சிங்கப்பூர் அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டவர்களில் மூன்று சிங்கப்பூரர்களும் உள்ளனர். கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் மூன்று சிங்கப்பூரர்களுடன் தொடர்பில் உள்ளது. அந்த மூன்று சிங்கப்பூரர்களும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பதிவுச் செய்திருந்த நிலையில், அவர்களுடன் அமைச்சகமும் தொடர்பில் உள்ளது.

பூனைக்கு நீதி கோரி ஆன்லைனில் குவியும் மனு! – மாடியிலிருந்து வீசப்பட்ட பூனை!

தூதரக உதவி தேவைப்படுபவர்கள் கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம் (அல்லது) வெளியுறவு அமைச்சகத்தின் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். அதன் விவரங்கள் பின்வருமாறு:

மனைவியுடன் தகராறு! மாடியிலிருந்து வீசினேன்! – 14வது மாடியிலிருந்து தூக்கி வீசிய கோபக்கார கணவருக்குச் சிறை!

கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

தொலைபேசி எண்: +60-3-2161-6277,
24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி எண்: +60-16-661-0400.

ஜோகூர் பாருவில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகம்:

தொலைபேசி எண்: +60-7-226-5012,
24 மணி நேரம் செயல்படும் தொலைபேசி எண்: +60-19-791-1166,

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:

தொலைபேசி எண்கள்: +65 6379 8800,
+65 6379 8855.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.