சிங்கப்பூர் Microsoft நிறுவனத்தில் வேலையா? – 86,000 வேலைகளை உருவாக்கும் Microsoft நிறுவனமும் அதன் இணை நிறுவனங்களும்!

microsoft singapore jobs

சிங்கப்பூரில் 2026ஆம் ஆண்டுக்குள் சுமார் 86,000 வேலைகளை Microsoft மற்றும் அதன் இணை நிறுவனங்கள் வழங்கவுள்ளன.அவற்றில் 50,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தகவல்தொழில்நுட்பத் துறை சார்ந்தவையாக இருக்கும்.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்,தொழில்நுட்பக் கல்விக் கழகம் போன்றவற்றுடன் Microsoft நிறுவனம் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

அப்போது அந்த விவரங்களை வெளியிட்டது.தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து செய்யப்படும் 5 ஆண்டுத் திட்டத்தில் சுமார் 300 மாணவர்களுக்குத் தரவு நிலையங்களில் வேலை செய்வதற்குத் தேவையான திறன்கள் கற்றுக்கொடுக்கப்படும்.

இவற்றில் செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகுப்பாய்வு, இணையப் பாதுகாப்பு முதலியவை அடங்கும்.அடுத்த ஆண்டு The Datacenter Academy என்ற திட்டம் தொடங்கப்படும்.

மின்னிலக்கத் தொழில்நுட்பம்,காலநிலை விவகாரங்கள் போன்றவை குறித்து தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடனான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் பணியாற்றவுள்ளன.