சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்கள் 4 பேர் மரணம்!

mid-sea collision fishermen death
(Photo: Special Correspondent via Hindu Tamil)

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்கு கப்பல் மோதிய விபத்தில் காணாமல் போன ஒருவரின் உடல் மீட்கப்பட்டு சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அவர் தமிழகத்தின் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த மீனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் – அதன் மதிப்பு S$2.3 மில்லியனுக்கும் அதிகம்

கடந்த 14ம் தேதி மங்களூரு கடற்கரையில் இருந்து 43 கடல் மைல் தொலைவுக்கு அப்பால் 14 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த சரக்குக் கப்பல் அவர்களின் படகில் மோதியது, இதில் அந்த படகு நீரில் மூழ்கியது.

அதில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.

இதில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர், மேலும் தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மாயமான மற்றவர்களை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் பழனிவேல் என்ற மீனவரின் உடல் மீட்கப்பட்டது.

நேற்று, அவரின் சொந்த ஊரான கன்னிராஜபுரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்றது.

கடந்த 13 மாதங்களாக மூடப்பட்டிருக்கும் சிங்கப்பூர்-மலேசியா எல்லை – ஊழியர்கள் அவதி!