மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வரும் சிங்கப்பூரர்கள் – covid-19 கட்டுப்பாடுகள் நெருக்கடியாக இருப்பதாக சிங்கப்பூர் மக்கள் கருத்து

singapore

உலக மக்களை அச்சுறுத்தி வந்த covid-19 வைரஸ் தொற்று சிங்கப்பூரில் தீவிரமாக இருந்தபோது வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் சென்றனர். Covid-19 வைரஸ் தொற்று காரணமாக சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. ஆனாலும் அதே காலகட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்றனர்.

Covid-19 கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது மூச்சுத்திணறலை போல இருந்ததாக சிங்கப்பூர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் covid-19 கட்டுப்பாடு நெருக்கடிகளின் காரணமாக கத்தாருக்கு செல்ல முடிவெடுத்தார். 2021 ஆம் ஆண்டு தோஹாவில் அவருக்கு வேலை கிடைத்தது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் துபாய், ரியாத், தோஹா போன்ற நகரங்களை அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். கடந்த வருடம் சவுதி அரேபியாவின் மக்கள் தொகை 36 மில்லியனாக இருந்தது. அவர்களின் 13.49 மில்லியன் மக்கள் அயல் நாட்டினர் என்று பிரபல ஊடகம் தெரிவித்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் என்ற அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம்,சவுதி அரேபியா, குவைத், ஓமன், பக்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் பங்கு வகிக்கின்றன. Covid-19 வைரஸ் தொற்றுக்கு பிறகும் இந்த நாடுகளில் அதிக அளவில் வெளிநாட்டினர் குடியேறுகின்றனர். இந்த நாடுகள் அனைத்தும் வெளிநாட்டினரை கவர பல்வேறு உத்திகளை மேற்கொள்கின்றன.