“சிங்கப்பூர் வறுமைக்கு எதிராக போர் தொடுப்பது அவசியம்” – நாடாளுமன்றத்தில் பேச்சு!

Pic: TODAY

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட மூன்றாவது மற்றும் இறுதி நாள் விவாதம் நேற்று (மார்ச் 02) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான லியோன் பெரேரா, சிங்கப்பூர் வறுமையை எதிர்த்து போரிடுவது அவசியம் செய்ய வேண்டிய ஒன்று எனக் கூறினார்.

ஏழை மக்களின் கண்ணியம் மற்றும் நலன்களைக் காக்கவும், வறுமையைப் போக்கவும், ஏழை வீடுகளில் உள்ள குழந்தைகள், வருமானம் குறைந்த வேலைகளில் சிக்குவது, நீண்ட காலம் வேலையின்மை ஆகியவற்றிற்கு பல்வேறு திட்டங்களை முன்வைத்தார்.

சிங்கப்பூரில் ART கருவிகளின் தேவை அதிகரிப்பு – உள்ளூரிலேயே தயாரிக்க நிறுவனங்கள் விண்ணப்பம்!

மேலும், நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட சமூகத்தை உருவாக்கும் எங்களுடைய உறுதி மொழியே எங்களை செயல்பட வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வறுமைக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பதாலும், ஏழை குழந்தைகளுக்கான ஆரம்பகால தலையீடுகள் ஆகியவற்றால் எதிர்காலத்தில் சமூக உதவி தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும், இதில் செய்யப்படும் முதலீடுகளால் நாட்டின் பொருளியல் திறன் அதிகரிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரான லியோன் பெரேரா தெரிவித்தார்.

புதிய பேருந்து நிறுத்தங்கள் தொடர்பான எஸ்பிஎஸ் டிரான்ஸிட் நிறுவனத்தின் அறிவிப்பு!