வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட “பிரிட்ஜெட் டான்” காலமானார்

Home/FB

வெளிநாட்டு ஊழியர் உரிமைக் குழுவின் நிறுவனர் பிரிட்ஜெட் டான் (Bridget Tan), நேற்று (ஏப்ரல் 18) காலமானார்.

புலம்பெயர்வு பொருளாதாரத்திற்கான மேம்பாட்டு அமைப்பின் (இல்லம்) நிறுவனரான அவருக்கு வயது 73.

டாக்ஸி பயணிகளுக்கு தமிழ் ஊழியர் செய்த உதவி… “மற்றவர்களுக்கு உதவுவதில் தமிழனை அடிச்சிக்க முடியாது” – குவியும் பாராட்டு

“கடந்த 2014ஆம் ஆண்டில் டான் பக்கவாதத்தால் முதலில் பாதிக்கப்பட்டார், அவர் கடந்த சில ஆண்டுகளாக பாத்தாமில் இருந்துள்ளார்,” என்று அந்த இல்லம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.

இந்த இறப்பு செய்தியை கேட்டு மிகவும் வருத்தமடைந்துள்ளோம், குடும்பத்தினருடன் அவருக்காக பிரார்த்தனைகள் செய்வதாகவும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

டான், அயராது பாடுபட்ட வக்கீல் என்றும், புலம்பெயர்ந்த ஊழியர்களின் உரிமைகளுக்காக போராடுவதில் சாம்பியன் என்றும் இல்லம் கூறியது.

PeaceWomen Across the Globe organisation அமைப்பால், டான் 2005இல் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

லாரி மோதியதில் ஆடவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு