வெளிநாட்டு ஊழியர் பலி: லாரியில் ஏற்றப்பட்ட மரம் தாக்கி பரிதாப உயிரிழப்பு

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

வெளிநாட்டு ஊழியர் ஒருவர் லாரியில் ஏற்றப்பட்ட மரம் விழுந்ததில் மரணமடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

லாரியில் ஏற்றப்பட்ட மரம் விழுந்து வெளிநாட்டு ஊழியர் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து, நடைபாதையில் அவரின் தலை மோதியதால் பலியானதாக கூறப்பட்டுள்ளது.

28 வயதான பங்களாதேஷ் ஊழியர் நேற்று புதன்கிழமை உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

தீயை அணைக்க சென்ற வீரர் மயங்கி விழுந்த சோகம்

எங்கே நடந்தது?

இந்த சம்பவம் 1003 Toa Payoh Industrial Parkக்கு அருகில் உள்ள Toa Payoh ஈஸ்ட்டில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடந்தது என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று தெரிவித்தது.

எங்கு பணிபுரிந்தார்?

அவர் பென்டா லேண்ட்ஸ்கேப்பில் (Penta Landscape) பணிபுரிந்தார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

மரத்தை வெட்டும் பணிகளுக்குப் பிறகு மரத்தின் கிளைகளை லாரியில் ஏற்றும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது கிரேனைப் பயன்படுத்தி கிளைகளை தூக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது மரம் கவணிலிருந்து நழுவி ஊழியரைத் தாக்கியதாகவும், பின்னர் அவரின் தலை நடைபாதையில் மோதியதாகவும் MOM குறிப்பிட்டுள்ளது.

மொத்த ஊழியர்களின் இறப்புகள்

ஊழியரின் இந்த மரணத்தை சேர்த்து 2022 இல் மட்டும் பதிவான வேலையிட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை 43 ஆகும்.

இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டில் 42 வேலையிட இறப்புகள் ஏற்பட்டது, தற்போது 43 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

நெருங்கும் ஆண்டு இறுதி.. எச்சரிக்கை விடுக்கும் சிங்கப்பூர்