சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம்: “நல்லது செய்தும் கெட்ட பெயர்” – வைரல் காணொளி

MEDIACORP CHANNEL 5/FB

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டைக் காட்டுவதற்காக மீடியாகார்ப் சேனல் 5இன் காணொளி வைரலாகியுள்ளது.

அதன் நான்காவது சீசனின் காணொளி, கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 6) வெளியிடப்பட்டது, அதே நாளில் அந்த சேனலின் பேஸ்புக் பக்கத்திலும் அது வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 9 பேருக்கு தொற்று – தொடரும் தீவீர சோதனை

“லீவ் யுவர் ஸ்க்ரிமிமினேஷன் அட் தி டோர்” என்ற தலைப்பில் வெளியான அந்த இரண்டு நிமிட காணொளி, சுமார் 4.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதில், ஒரு பள்ளி மாணவி கீழே குனிந்து இருக்கும் நேரத்தில், அவருக்கு பின்னால் இருந்து லாரி வருகிறது. அப்போது, அந்த மாணவியை வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் வந்து காப்பாற்றுகிறார்.

ஒரு பள்ளிக்கு வெளியே நடக்கும் இந்த சம்பவத்தில், ஊழியர் விரைந்து அந்த சிறுமியை வெளியே தள்ளுகிறார், இதனால் ஊழியருக்கு கையில் காயம் ஏற்படுகிறது.

இருப்பினும், சிறுமியின் தாய் அந்த ஊழியரையே தாக்கி பேசுகிறார். மேலும் அவரது மகளிடம் இருந்து விலகிச் செல்லவும், அவளைத் தொட வேண்டாம் என்றும் ஊழியரிடம் சிறுமியின் தாயார் கூறுகிறார்.

நான்கு சிங்கப்பூர் தாய்மார்களைப் பற்றிய நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் காணப்பட்ட இந்த நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடத்தை, நெட்டிசன்களைக் கோபப்படுத்தியது.

அந்த காணொளி கிட்டத்தட்ட 5,000 முறை பகிரப்பட்டுள்ளது மற்றும் 800க்கும் மேற்பட்ட கருத்துகளை பெற்றுள்ளது.

இப்படித்தான் பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் நெட்டிசன்கள் பலர் கவலை தெரிவித்தனர்.

மலேசியா செல்லும் அனைத்து VTL பயணிகளுக்கும் புதிய அப்டேட்