தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் 550 பேர் தாக்கப்பட்டுள்ளனர்…

new work permit CMP Employers provide proof of stay
Photo: Today

சிங்கப்பூரில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தங்குவிடுதிகளில் வசிக்கும் சுமார் 550 வெளிநாட்டு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், வெளிநாட்டு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட கலவரங்கள், கைகலப்புகள் மூலம் அவர்கள் காயமடைந்தனர் என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று (பிப்.14) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் Foo Mee Har, வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதியில் நிகழும் கைகலப்புகள் குறித்தும், அதனை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார், இதற்கு அமைச்சர் கா.சண்முகம் எழுத்துபூர்வ பதிலை அளித்தார்.

சிங்கப்பூரில் 2021ல் ஏற்பட்ட சாலை விபத்துகள், மரணங்கள் எவ்வளவு தெரியுமா?

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவிடுதியின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விடுதி நடத்துநர்களுடன் காவல்துறை அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது என அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்தார்.

மேலும், மனிதவள அமைச்சின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான உரிம நிபந்தனைகளின்படி, தங்குவிடுதி நடத்துனர்கள் நுழைவுக் கட்டுப்பாடு, கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தங்குவிடுதியில் உதவி தேவைப்பட்டு அழைப்பு வந்து அங்கு செல்லும் காவல்துறையினர் அங்குள்ள நிலவரத்தை மதிப்பிட்டு தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் ART Kit – காரணம் என்ன.?