“சிங்கப்பூரை விட்டு சென்ற ஊழியர்கள் சொந்த நாட்டில் வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.. சிங்கப்பூர் ஊழியர்களின் பிணைப்புகளை பலப்படுத்தியுள்ளது”

(Photo: MOM)

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தான் மீண்டு வந்த கதையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உடன் பகிர்ந்துள்ளார்.

33 வயதான திரு ரஹ்மான் மிசானூர், பங்களாதேஷை சேர்ந்த கட்டுமான மேற்பார்வையாளர். இவர் நடுத்தர அளவிலான கட்டுமான நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். மேலும் திரு ரஹ்மான் தொழிலாளர் குழு ஒன்றை வழிநடத்துகிறார்.

கடந்த இரண்டு வருடங்களில், அவர் மூன்று தங்கும் விடுதிகளுக்கு மாறியுள்ளார், ஏனெனில் வேலை ஏற்பாடுகள் மாற்றம் மற்றும் செலவுகள் காரணமாக இடம் மாறியதாக கூறினார்.

“அதிகமான பொருளாதார சவால்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்” – பிரதமர் லீ!

இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவரின் வேலை குழு 70 வெளிநாட்டு ஊழியர்களில் இருந்து 20 ஆக சுருங்கியது.

“2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், வெளிநாட்டு ஊழியர்களிடையே தொற்று பரவியதை அடுத்து நான்கு மாதங்களுக்கு நான் சுங்கே தெங்காவில் உள்ள எனது தங்கும் விடுதியை விட்டு வெளியேறவில்லை.”

“என்னோட உடல் எடை 55 கிலோவிலிருந்து 62 கிலோவுக்கு கூடிப்போனது, ஏனென்றால் சாப்பிடுவது, தூங்குவது மட்டுமே என்னோட வேலையாக இருந்தது.”

ஒரே அறையில் அடைந்து கிடந்ததால் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படும், இதனால் பல ஊழியர்கள் மனச்சோர்வடைந்தவர்களாகவும் சித்தப்பிரமை பிடித்தவர்களை போன்றும் உணர்ந்தனர்.

இந்த சூழலில் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் வசிக்கும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோவிட் -19 காரணமாக இறப்பதாக சிலருக்கு செய்தி கிடைத்தது. இதனால் அடுத்தது யாராக இருக்கும் என்று தங்களை பயப்பட வைத்தது, என்றார் திரு ரஹ்மான்.

சிங்கப்பூரில், என்னால் வேலை செய்ய முடியாத நிலையிலும் என்னுடைய நிறுவனம் என் சம்பளத்தை வழங்கியது. என்னை கஷ்ட காலத்தில் ஆதரித்த என் நிறுவனத்துக்கு கடின உழைப்பின் மூலம் கைம்மாறு திருப்பிச் செலுத்துகிறேன்.

“கடந்த ஆண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிய ஊழியர்கள் தங்கள் சொந்த நாடுகளில் வேலை கிடைப்பதில் சிரமப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

“சிங்கப்பூரில் சக ஊழியர்களுடன் கடினமான சூழ்நிலையில் தங்கி இருப்பது எங்களுடைய பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது. எங்களுக்குள் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.”

நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருந்தால் இழந்ததை மீண்டும் நாம் பெற முடியும் என்று நான் எப்போதும் நம்புகிறேன், என்றார் திரு ரஹ்மான்.

நாகேந்திரன் கே. தர்மலிங்கம் வழக்கு: கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மலேசியாவுக்கு பதில் கூறிய பிரதமர் திரு லீ!