வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்ற தமிழக ஊழியர்!

Migrant worker performed traditional Indian martial arts wins
(Photo courtesy of Ganesan Sandhirakasan)

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில், ஊழியர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் என்ற செய்தியை நாம் நம் தளத்தின் வாயிலாக அறிந்து வைத்திருப்போம்.

அந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் சிலம்பாட்டம் மூலம் தனது திறமையை நிரூபித்து S$1,000 முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.

@sg4mw டிக்டோக் கணக்கில் பதிவிடப்பட்ட அவரின் காணொளியை அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். ஆகையால், திரு. கணேசன் சந்திரகாசன் என்ற ஊழியர் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும், பட்டியலில் இருந்த 19 நபர்களை வீழ்த்தி S$1,000 பரிசுத் தொகையை கணேசன் தட்டிச் சென்றார்.

இந்த போட்டி, தமிழ் மொழி தொடரான ​​” சில் பன்னு மாப்பி! ” இன் ஒரு பகுதியாகும், இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.

டேக்வாண்டோவைக் கற்பிக்கும் 33 வயதான அந்த ஊழியர், தனது 12 ஆம் வயதில் இருந்து தற்காப்புக் கலைகளைத் தொடங்கினார், 2010இல் நடந்த முதல் சிலம்பம் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார்.