கால்வாயில் விழுந்த கார்… சிக்கி தவித்த இருவரை உடனடியாக குதித்து மீட்ட வெளிநாட்டு ஊழியர் – குவியும் நன்றிகள்

Migrant worker rescues mother child canal accident

கால்வாயில் விழுந்த வாகனத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மற்றொரு வாகனம் மோதியதால், புக்கிட் திமாவில் உள்ள கால்வாயில் விழுந்த வாகனத்திலிருந்த ஒரு பெண்ணும் அவரது மகனும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியரை மோதி தூக்கிவீசிய லாரி… சாலையை கடக்க முயன்றபோது ஏற்பட்ட சோகம் (வீடியோ)

இந்த விபத்து குயின்ஸ் சாலை மற்றும் லூதரன் சாலை சந்திப்பிற்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.20 மணியளவில் நடந்ததாக போலீஸ் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்தன.

அந்த பெண் குயின்ஸ் சாலையில் நீல நிற காரை ஓட்டிக்கொண்டு சென்றபோது, ​​லூதரன் சாலையில் கருப்பு நிற கார் வந்தது. அப்போது இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில், பல முறை பெல்டி அடித்த நீல நிற கார் தடுப்பு வேலியை உடைத்து கொண்டு கால்வாயில் கவிழ்ந்தது.

அப்போது தனது சக ஊழியர்களுடன் அருகில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்த 35 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவருக்கு பலத்த சத்தம் கேட்டுள்ளது. பிறகு என்ன நடந்தது என்று பார்க்க அவர் ஓடி சென்றுள்ளார்.

சாலையில் ஒரு காரும், கால்வாயில் மற்றொரு காரும் இருந்ததை பார்த்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.

பெண்ணும் சிறுவனும் காரிலிருந்து இறங்கிய பிறகு, அந்தப் பெண் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டதா என்று கேட்டுக்கொண்டு இருந்தார் என்றும், ஆனால் சிறுவன் பயத்தில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான் என்றும் அவர் ஷின் மின்னிடம் கூறினார்.

உடனடியாக கால்வாயில் குதித்த ஊழியர், சிறுவனை தூக்கிக் கொண்டு கால்வாய்க்கு மேலே நின்றுகொண்டிருந்த சக ஊழியர்களிடம் அவனை ஒப்படைத்தார்.

மேலும், அந்த பெண் கால்வாயில் இருந்து வெளியேறுவதற்கு ஏதுவாக ஏணியையும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர்.

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது தாய் மற்றும் மகன் இருவரும் சுயநினைவுடன் இருந்தனர் என்று SCDF தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 60 வயதுடைய பெண் ஓட்டுநர் ஒருவர் போலீசாரின் விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சுற்றுலா பேருந்து கோர விபத்து: இருவர் மரணம் – மூன்று பேர் படுகாயம்.. 15 பேர் மருத்துவமனையில்