வெளிநாட்டு ஊழியரின் கடும் உழைப்பு: இரு நாட்களில் S$865 வருமானம்… “எல்லாம் ஈசி தான்” – கெத்து காட்டும் ஊழியர்

migrant worker singapore earn
Billy Cane/Facebook

சிங்கப்பூரில் உணவு விநியோகம் செய்யும் ஓட்டுநராக பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர் ஒருவர், வேலையைப் பற்றிய பொதுமக்களின் மனநிலையை மாற்றும் செயலில் இறங்கியுள்ளார்.

சுமார் S$865.32 வெள்ளியை வெறும் இரு நாட்களில் ஊழியர் சம்பாரித்துள்ளதாக கூறியுள்ளார். அதாவது டிசம்பர் 10 மற்றும் டிசம்பர் 11, முறையே சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அவர் ஈட்டிய வருமானம் அது எனப் பகிர்ந்துள்ளார்.

மலேசிய நாட்டை சேர்ந்த அவர் ஒரு நாளைக்கு சராசரியாக S$432.66 வெள்ளியை ஈட்டியது அனைவரின் ஆச்சரியத்தையும் பெற்றுள்ளது.

டிசம்பர் 11 ஆம் தேதி மட்டும், அவருக்கு கிடைத்த 36 ஆர்டர்களை முடிக்க, காலை 8 மணி முதல் கிட்டத்தட்ட இரவு 9 மணி வரை 12 மணி நேரத்திற்கும் மேலாக அவர் உழைத்ததாக கூறியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் பில்லி கேன் என்ற பெயர் கொண்ட அந்த ஊழியர் தனது சுயவிவரத்தின்படி ஃபுட்பாண்டாவில் உணவு விநியோக ஓட்டுநராக பணிபுரிகிறார்.

பில்லி தனது வேலையை கடவுள் போல பார்ப்பவர் என்பது தெளிவாக தெரிகிறது, உணவு விநியோக வேலை பற்றிய பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு எண்ணி அவர் இவ்வாறு செய்துள்ளார்.

எந்த வேலையாக இருந்தால் என்ன கடுமையாக உழைத்தால் கண்டிப்பாக பயன் இருக்கும் என்பதற்கு அவர் ஒரு முன் உதாரணம்.