வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

COVID-19 Singapore dorms covid-19
(Photo: TODAY)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களை பாதிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவதாகவும், அது கவலையளிப்பதாகவும் உள்துறை, தேசிய வளர்ச்சி துணையமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் கூறியுள்ளார்.

“நீங்கள் சம்பாதிப்பது உங்களுக்கு முக்கியம், அது உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.”

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சமூக திருவிழா நாள் அன்று பேசிய அமைச்சர் முகமது ஃபைஷால் இப்ராஹிம் அதனை தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டில் மட்டும் இவ்வகையான மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களில் 15.5% பேர் work permit அனுமதி பெற்றவர்கள்.

இந்த மோசடிகளால் வெளிநாட்டு ஊழியர்கள் $25 மில்லியன் தொகையை இழந்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இது 2019 ஐ விட ஐந்து மடங்கு அதிகமாகும். எனவே இதனை தீவீரமாக எடுத்து கொண்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.