கோவிட்-19 தொற்றுக்கு பிறகு முதன் முறையாக பெரிய அளவில் ஒன்றுகூடிய “வெளிநாட்டு ஊழியர்கள்” – மகிழ்ச்சி, கொண்டாட்டம்!

migrant workers celebrate Hari Raya Aidilfitri
MOM

சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நோன்புப் பெருநாளை வெளிநாட்டு ஊழியர்கள் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டங்களில் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பல்வேறு விடுதிகளை சேர்ந்த அவர்கள் துவாஸ் சவுத் பொழுதுபோக்கு நிலையத்தில் நேற்று (மே 3) நோன்பு பெருநாளை ஒன்றுகூடி கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் கம்பீரமான ராஜ நாகம், பெரிய உடும்பை அப்படியே விழுங்கும் பிரம்மிப்பு காட்சி – இணையத்தில் வைரல்

கோவிட்-19 தொற்றுக்கு பிறகு முதன் முறையாக பெரிய அளவில் ஒன்றுகூடிய இந்த கொண்டாட்டம், ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸின் இயக்கம் மற்றும் மனிதவள அமைச்சகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் டான், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் சிறப்பு வாய்ந்தது என்றும் முக்கியமான தருணம் என்றும் கூறினார்.

“கடந்த இரண்டு ஆண்டுகளில், வெளிநாட்டு ஊழியர்கள், அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் ஏற்றாற்போல் மாற வேண்டியிருந்தது” என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“உங்கள் அனைவருக்கும் இது எளிதானது அல்ல என்று எனக்குத் தெரியும் … ஆனால் சிரமங்களிலிருந்து மீண்டு வருவோம் என்ற திறனை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்பதை பெருமையுடன் அவர் கூறினார்.

“என்னை அடித்து காயப்படுத்தி, S$230,000 பணத்தை திருடிவிட்டனர்” என போலி நாடகம் – CCTV காட்சிகளை வைத்து ஆடவரை தூக்கிய போலீஸ் – விசாரணை