வெளிநாட்டு ஊழியர்கள் இருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்த இந்திய ஊழியருக்கு தண்டனை

migrant workers death indian worker jailed
ItsRainingRaincoats & Social Media

சிங்கப்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் இருவருக்கு மரணத்தை விளைவித்த லாரி ஓட்டுநருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பான் தீவு அதிவிரைவுச்சாலையின் ஓரத்தில் நின்ற டிரக்கைக் கவனிக்கத் தவறிய லாரி ஓட்டுநர், டிரக் மீது மோதியதில் லாரியில் பயணித்த இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.

இந்தியாவை சேர்ந்த 37 வயதான வெள்ளைச்சாமி பிரபு அந்த லாரியின் ஓட்டுநர் ஆவார், இந்நிலையில் அவருக்கு நேற்று திங்கள்கிழமை (நவம்பர் 28) 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கவனமின்றி வாகனம் ஓட்டியதாக குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டன.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

அந்த நேரத்தில் பிரபு, பிரைட் ஏசியா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் தள மேற்பார்வையாளர் மற்றும் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில், நிறுவனத்தில் இருந்து 17 ஊழியர்களை ஏற்றி கொண்டு, 70 துவாஸ் சவுத் அவென்யூ 1 வழியாக பிரபு லாரியை ஓட்டினார்.

இந்த சம்பவத்தில் இறந்த இரண்டு ஊழியர்கள் சுகுணன் சுதீஷ்மோன் (28) மற்றும் டோஃபசல் ஹொசைன் (33) ஆகியோர் ஆவர்.

மீதமுள்ள 15 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு 8 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட உரிமத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

வேலையில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு – ஊழியர்களின் வயது 35க்கும் குறைவு என்பது அதிர்ச்சி தகவல்