விடுதியில் வசிக்கும் 30,000 ஊழியர்கள் வரை… 8 மணி நேரம்… சமூக பொது இடங்களுக்கு செல்ல அனுமதி

(Photo: MOM)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் சமீபத்திய சமூகக் கட்டுப்பாடுகளுடன் சேர்த்து ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செவ்வாய் (மார்ச் 15) முதல் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அதிகமான ஊழியர்கள் சமூக இடங்களுக்கு செல்ல முடியும்.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!

தங்கும் விடுதிகள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களுக்கும் மேற்பார்வையில் உள்ள விளையாட்டு வசதிகளில் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட 30 ஊழியர்கள் வரை ஒன்றாக அனைத்து விளையாட்டு நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க முடியும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதே போல, தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக வருகைத் திட்டமும் அடுத்த செவ்வாய்கிழமை விரிவுபடுத்தப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் 15,000 பேர் வரை, வார நாட்களில் சமூக இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அதே எண்ணிக்கை வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 பேர் வரை அதிகரிக்கப்படும்.

சமூக இடங்களுக்கு செல்லும் ஊழியர்க்ள 8 மணி நேரம் வரை (வருகைக்கு) இருக்கலாம்.

பிரபலமான சமூக இடங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, வெளிநாட்டு ஊழியர்கள் அந்த தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் செல்ல முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று MOH தெரிவித்துள்ளது.

பெண்ணை சீரழித்து, அடித்து தாக்கி சாலையில் போட்டுச்சென்ற இரு வெளிநாட்டு ஊழியர்கள் – நீதிமன்றத்தில் ஆஜர்