வெளிநாட்டு ஊழியர்களை தங்கும் விடுதிக்கு நேரடியாக சென்று சந்தித்த MWC – 200 ஊழியர்களுக்கு தற்காலிக உணவு ஏற்பாடு

New cluster at S11 Dormitory @ Punggol (Photo: Reuters / Edgar Su)

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் 9 பேர் சமீபத்தில் சம்பளம் முறையாக தரவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் செய்தி வெளியிட்டோம்.

“வேலையிடத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஊழியர்கள் அதை தாங்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.”

“அதற்கு பதிலாக கட்டுமான, மரத்தொழில் ஊழியர் சங்கம் (BATU) மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் (MWC) ஆகியவற்றை ஊழியர்கள் நாடலாம்” என்றும், தாங்கள் உதவி செய்ய நாங்கள் தயாராக இருப்பதாகவும் அவைகள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் வேண்டி போராட்டம்: தன் சொந்த சேமிப்பில் சாப்பாடு, போக்குவரத்தை பார்த்து வந்த அவலம்

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை நன்றாகக் கவனித்துக்கொள்வது தான் உங்களின் நலம் என்றும் அவைகள் கூறின.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களைச் சந்திக்க S11 Dormitory @ Punggol தங்கும் விடுதிக்கு MWC சென்றது.

தற்காலிகமாக 200 ஊழியர்களுக்கு தேவையான உணவுகளை தினசரி வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து MOM தகவல் அறிந்திருப்பதாகவும், மேலும் அவர்களுக்கான உதவி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்