ஓமிக்ரான் பாதிப்பால் ஊழியர் தங்கும் விடுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? – அமைச்சர் பதில்

(PHOTO: Roslan Rahman / AFP)

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான COVID-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு முன்பு “ஓமிக்ரான்” கிருமியின் நிலைமையை மனிதவள அமைச்சகம் (MOM) மிக அணுக்கமாக கண்காணித்து வருவதாக மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறினார்.

நேற்று சனிக்கிழமையன்று (டிசம்பர் 18) சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் டான் இதனை கூறினார்.

மாண்டாய் அருகே கொழுந்து விட்டெறிந்த பேருந்து (காணொளி) – தீக்கு இறையாய் போனது

வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் பணித் தரத்தை மேம்படுத்துவதில் அமைச்சகத்தின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் எதிர்கால திட்டங்களை பற்றி டாக்டர் டான் கூறினார்.

ஓமிக்ரான் பாதிப்புகள் ஊழியர் தங்குமிடங்களில் அதிகமானால், மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு, ​​சிங்கப்பூரில் டெல்டா நோய்த்தொற்று பாதிப்புகளின் போது, ​​மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை “மிக மிகக் குறைவு” என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

அதே போல, வெளிநாட்டு ஊழியர்களின் தடுப்பூசி விகிதம் சுமார் 98 சதவீதமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

எனவ, ஓமிக்ரான் பாதிப்பை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அதுபற்றி கூடுதல் ஆய்வுகள் வெளிவரும்போது, ​​அதன் பாதிப்பு லேசானது என்று நம்புவதாகவும், அவ்வாறு இருக்கும் பட்சத்தில், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெரிவித்தார்.

சிங்கப்பூர் சென்ற உரிமையாளர் – ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டிய நிறுவன ஊழியர்கள்!