வெளிநாட்டு ஊழியர்கள் சம்பளம் வேண்டி போராட்டம்: தன் சொந்த சேமிப்பில் சாப்பாடு, போக்குவரத்தை பார்த்து வந்த அவலம்

migrant workers employed by Shanghai Chong Kee use personal savings for food, transport

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் 9 பேர் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக நாம் செய்தி வெளியிட்டோம்.

அவர்கள் ஷாங்காய் சோங் கீ (Shanghai Chong Kee) நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட சேமிப்பு மூலம் தங்கள் உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளை அவர்கள் பார்த்துவந்ததாக அரசு சாரா அமைப்பு மற்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் 6 மணிநேரம் வேலை பார்க்கும் ஊழியர்கள்… லாரியை ஓட்டும் முன் கட்டாய ஓய்வு

செவ்வாய் கிழமை பிற்பகல், ஆங் மோ கியோவில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றின் நுழைவு வாயில், வெளியேறும் பகுதியை தடுத்து போராட்டம் செய்ததாக ஒன்பது ஊழியர்கள் பிடிபட்டுள்ளனர்.

மாண்டரின் மொழியில் ஷாங்காய் சோங் கீ என்ற நிறுவனத்தின் பெயருடன் பதாகைகளை ஏந்தி, தங்களுக்கு சம்பளம் வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

தனது நிறுவனத்திற்கும் துணை ஒப்பந்ததாரரான ஜெங்டா கார்ப்பரேஷனுக்கும் (Zhengda Corporation) இடையே பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறுதான் இந்த எதிர்ப்பு என்று அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு இயக்குநர் கூறினார்.

அந்த ஒன்பது ஊழியர்கள் ஜெங்டா கார்ப்பரேஷனைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஆறு பேர் ஷாங்காய் சோங் கீ நிறுவனத்தின் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

“வேண்டும் வேண்டும் சம்பளம் வேண்டும்” – வெளிநாட்டு ஊழியர்கள் பதாகையுடன் போராட்டம்

தொடர்ச்சியாக upskirt வீடியோ எடுக்கும் ஆசாமி – மீண்டும் அதே வீடியோ… 36 வார சிறை விதிப்பு