“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

ஊழியர்கள் சிலர் தங்கள் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் யோவ் குறிப்பிட்டுள்ளார்.

அவர், தன்னுடைய ஊழியர்களுக்கு தீபாவளி சிறப்பு ஏற்பாடுகளை செய்தார், அதாவது பண உதவி, பிரியாணி என அசத்தினார் என்பதை முன்னர் நம் பதிவில் பார்த்தோம்.

வெளிநாட்டு ஊழியர்களை மகிழ்வித்த கட்டுமான நிறுவனம்: பண பரிசு, பிரியாணி என அசத்தல்!

அந்த ஊழியர்களில் ஒருவரான சின்னையா பழனியப்பன் இதுபற்றி கூறுகையில்; கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நான் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை என்றார்.

இருப்பினும், “நிறுவனத்தின் அணுகுமுறை, பண்டிகை ஏற்பாடு என்னை சிறப்பாக உணரவைப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இரண்டு வருடங்களாக சொந்த நாடு செல்லாத மற்றொரு ஊழியர் ஆறுமுகம் மருது பாண்டியன் கூறுகையில்; “நான் எனது சொந்த ஊருக்குச் சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன, எங்கள் அனைவரையும் திருப்திப்படுத்த இந்த கூடுதல் முயற்சியை எடுத்த நிறுவனத்திற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன் ” என்றார்.

“நிறுவனத்தின் தீபாவளி அலங்காரங்கள் அருமையாக இருந்தது, முதன்முறையாக [நிறுவனம்] சுற்றிலும் தீபங்களின் திருவிழாவுடன் உணவை வழங்குவதைப் பார்த்தேன்.”

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் பிறப்பு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு ஆகியவற்றை தவறவிட்டதாகவும் யோவ் குறிப்பிட்டார்.

ஏனென்றால், அவர்களின் குடும்பம் அங்கு நலமுடன் வாழ, ஊழியர்கள் தொடர்ந்து இங்கு வேலையை தக்கவைத்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

சொந்த நாடு சென்றால் வேலை இழந்துவிடுவோமோ அல்லது இங்கேயே இருந்தால் சொந்தங்களை பார்க்க முடியாதே, என்ற கொடுமையான கவலை ஊழியர்களிடம் எப்போதும் உள்ளது, என்றார்.

சிங்கப்பூரில் வேலை என்றதும் மயங்கிய வாலிபர் – சுமார் 3.5 லட்சம் ரூபாய் பறிபோன சோகம்