வெளிநாட்டு ஊழியருக்கு சிறை.. பெண்ணுக்காக 3 ஊழியர்கள் இடையே பொது இடத்தில் கைகலப்பு

migrant worker jailed in singapore
(Photo: wsatlaw)

சிங்கப்பூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தான் விரும்பும் பெண்ணின் காதலனுடன் கைப்பேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு ஊழியர், அதோடு விடாமல் கையில் ஆயுதத்துடன் காதலனை பார்க்க சென்றதால் பிடிபட்டார்.

ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக, 27 வயதான அந்த பங்களாதேஷ் கட்டுமான ஊழியருக்கு நேற்று (ஜூன் 7) மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பைக்கில் சூப்பர்மேன் சாகசம்… நொடியில் பிரிந்த உயிர் – மலேசிய ஆடவரின் பரிதாப செயல்

என்ன நடந்தது?

கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று, தான் விரும்பும் பெண்ணின் காதலனான ஆசிக் என்ற ஊழியருடன் கைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஹொசைன்.

வாக்குவாதம் முற்ற நேரில் சந்திப்போம் என இருவரும் கிளம்பியுள்ளனர். அப்போது ஹொசைன் வெட்டு கத்தி மற்றும் சமையல் கத்தி ஆகியவற்றை தன்னுடன் மறைத்து எடுத்து சென்றுள்ளார்.

ஆசிக் தன் நண்பருடன் வர, சிம் லிம் ஸ்கொயருக்கு பின்னால் மூன்று பங்களாதேஷ் ஊழியர்களும் சந்தித்து கைகலப்பில் ஈடுபட்டனர்.

அதனை கண்ட பொதுமக்கள் சிலர் அவர்களை தடுத்து விட்டனர். அச்சமயம், ஹொசைன் ஆயுதம் வைத்துருப்பதை கண்ட ஆஷிக்கின் நண்பர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதை அடுத்து ஹொசைனை அவரை வீட்டில் கைது செய்த போலீசார், பின்னர் ரிமாண்ட் செய்தனர்.

ஹொசைன் முகம்மது அகித் என்ற அந்த ஊழியர் கடந்த ஆண்டு செப்டம்பர் 11 அன்று அவர் ரிமாண்ட் செய்யப்பட்டார். ஹொசைன் செப்டம்பர் 27, 2022 முதல் பிப்ரவரி 21 வரையிலும், பின்னர் மார்ச் 6 முதல் ஏப்ரல் 14 வரையிலும் ஜாமீனில் இருந்தார்.

தற்போது அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, பயன்படுத்தவில்லை என்றாலும் பொது இடத்திற்கு ஆயுதம் கொண்டு சென்றது குற்றம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டம்

பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை செய்து சிக்கிய ஊழியர் – கைது செய்த போலீஸ்