வெளிநாட்டு ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு: குறைந்த வருமானம் கொண்ட ஊழியர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் – இலவசம்!

EssilorLuxottica

நம்முடைய கண் பார்வை பற்றிய கவலை நம்மில் இருக்கும் பச்சத்தில், ​​சிங்கப்பூரில் அமைந்துள்ள எண்ணற்ற ஆப்டிகல் கடைகளில் ஒன்றிற்குச் சென்று நாம் நம் பார்வையைச் சரிபார்த்துக்கொள்வோம்.

ஆனால், குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இதுபோன்ற சோதனைகள் சாதாரணம் அல்ல.

சொந்த நாடு செல்ல முடியாமல் தவித்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. “நான் என் ஊருக்கு போறேன்” மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாட்டவர் – வைரல் வீடியோ!

அவர்களுக்கு உதவும் வகையில், EssilorLuxottica என்ற கண்ணாடி நிறுவனம் மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் தற்போது இலவசமாக தங்கள் பார்வைப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

அதோடு மட்டுமல்லாது, இயந்திரங்களிலிருந்து Reading glasses கண்ணாடிகளையும் இலவசமாக பெறலாம்.

EssilorLuxxottica நிறுவனம் கடந்த புதன்கிழமை (மார்ச் 30) அன்று பார்வை குறைபாடுகள் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய டிஜிட்டல் சோதனை முறையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.

இலவச வாசிப்பு கண்ணாடிகளைப் பெறுவதற்கு எளிய மூன்று வழிகள்

முதலில் ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில், இணையதளம் மூலம் ” முதற்கட்ட ஆன்லைன் பார்வை” பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அந்த சோதனையில் அவர்களுக்கு மேலும் பார்வை சோதனை தேவை என்பது நிரூபணமானால், அவர்கள் மேலதிக சோதனைக்காக அந்நிறுவனத்தின் இயந்திரத்திற்கு செல்லலாம்.

பின்னர் இயந்திரம் வழியாக கண்ணாடிகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

EssilorLuxottica நிறுவனத்தின் இந்த மூன்றாண்டு திட்டம், சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு பார்வை பராமரிப்பை வழங்க வழிவகை செய்யும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பயணத் தளர்வு: 2 ஆண்டுகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தில் காணப்பட்ட வரிசைகள், மக்கள் கூட்டம்!