‘வெளிநாட்டு ஊழியர்களை இப்படித்தான் நடத்த வேண்டுமா?’ – கனமழையின்போது லாரியில் பயணம்: கவலைகொண்ட சிங்கப்பூரர்கள்

migrant workers getting rained in open lorry upsets Singaporeans
Singapore Incidents video Screenshot

லாரியில் நனைந்து கொண்டு பயணம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள் அடங்கிய காணொளி ஒன்று கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியானது.

அந்த காணொளிக்கு பல நெட்டிசன்கள் கோபமான கருத்துக்களை தெரிவித்து தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Work permit வேலை அனுமதியில் இப்படியும் மோசடி நடக்கும்.. சிக்கிய வேலைவாய்ப்பு முகவருக்கு சிறை

அதில் ஊழியர்களுக்கு வசதியான சிறந்த போக்குவரத்து வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

Singapore Incidents பக்கத்தில் வெளியான காணொளியின் தலைப்பு பின்வருமாறு: “வெளிநாட்டு ஊழியர்களுக்கான போக்குவரத்தின் பாதுகாப்பை வசதியை மாற்றித் தருமாறு LTA (நிலப் போக்குவரத்து ஆணையம்) மற்றும் MOM (மனிதவள அமைச்சகம்) ஆகியவற்றைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களை இப்படித்தான் நடத்த வேண்டுமா? 😑” என்று கூறப்பட்டது.

“அவர்கள் தான் நம் தங்குமிடங்களை கட்டி எழுப்பியவர்கள், ஆனால் நாம் அவர்களைப் பாதுகாக்கவில்லை” என்று ஒருவர் கமெண்ட் செய்தார்.

“சிங்கப்பூரில் அனைவருக்கும் ஒரே மாதிரியான தரநிலைகள் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது,” என்று மற்றொருவர் கருத்து தெரிவித்தார்.

லாரியின் பின்புறத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் குழு கூட்டமாக பயணம் செய்வதை Singapore Incidents வெளியிட்ட காணொளி மூலம் காண முடிந்தது.

Video: https://www.instagram.com/p/CwO0-GvA98G/

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

முதியவர் ATM கார்டை பயன்படுத்தி S$162,000 பணத்தை திருடிய வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சிறை