“வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூர் அழகாகிறது” – உணவு பொருட்களை பரிசாக அளித்த சிங்கப்பூர் பெண்

Facebook/Grace Cheong

சிங்கப்பூரில் Lunar புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த இந்த தருணத்தில், சிலரிடம் அதிகப்படியான உணவுகள் மிஞ்சி இருக்கலாம்.

அவற்றை என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியவில்லையா, அதனை என்ன செய்ய வேண்டும் என நெட்டிசன் கிரேஸ் சியோங் என்பவர் செய்து காட்டியுள்ளார்.

சாங்கி கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள்… கடல்வாழ் உயிரினங்களை தோண்டி எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற அறியாமை

நேற்று (பிப்ரவரி 4), பிரிக்கப்படாத புத்தாண்டு பொருட்களை அவர் சில வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கி பண்டிகை மகிழ்ச்சியை அவர்களுக்கும் கொண்டு வர விரும்பினார்.

அந்த பதிவில், அவர் ஒரு குடியிருப்புக்கு வெளியே பணியாற்றிய ஊழியர்களுக்கு தின்பண்டங்கள் கொண்ட பையை பரிசளித்ததாக விளக்கினார்.

நமது வெளிநாட்டு ஊழியர்களுக்கு மக்கள் கருணை காட்டுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு அட்மிரால்டியில் பெண் ஒருவர் S$50 நோட்டுகளை ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

உதவும் நல்லுள்ளங்கள் இருக்கும்வரை மனித நேயம், அன்பு, கருணை சாகாது.

தவறுதலாக போடப்பட்ட 4வது டோஸ் தடுப்பூசி…பெண்ணின் மரணம் குறித்து தீவீர விசாரணை மேற்கொள்ளும் MOH