சிங்கப்பூரில் “வெளிநாட்டு ஊழியர்கள் சம்பாதிக்கும் S$18 க்கு அது சாத்தியமில்லை”… உதவ முன்வருமாறு அழைப்பு

migrant workers itsrainingraincoats donation
itsrainingraincoats

சிங்கப்பூர் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் பயணங்களை இலகுவாக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு சைக்கிள்களை நன்கொடையாக வழங்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது, வெளிநாட்டு ஊழியர் தொண்டூழிய குழுவான Itsrainingraincoats.

ஊழியர்கள், சில சமயங்களில் தங்கும் விடுதிகளுக்கோ, வேலையிடங்களுக்கோ செல்ல நீண்ட நேரம் எடுப்பதாக Itsrainingraincoats ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

“செக்ஸ், செக்ஸ், செக்ஸ்” என்று சிறுமியை துன்புறுத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை!

ஊழியர்கள் வேலை செய்யும் இடங்களுக்கும், பொது போக்குவரத்து நிறுத்தங்களுக்கும் இடையே நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, அவர்களுக்கு பைக்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நாள் ஒன்றுக்கு அவர்கள் வாங்கும் S$18 சம்பளத்தில் புதிய பைக்குகளை அவர்களால் வாங்க முடியாது என்றும் அது கூறியது.

எனவே, அவர்கள் பெரும்பாலும் விரும்பும் சைக்கிள்களை சேகரித்து அவர்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நன்கொடையாக வழங்கப்படும் சைக்கிள்கள் எப்படி இருக்க வேண்டும்:

  • வயது வந்த ஆண்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்
  • ஓட்ட தகுந்த நல்ல நிலையில் இருக்க வேண்டும்
  • பூட்டுகளுடன் இருக்க வேண்டும்

மேலும், ஹெல்மெட்களை வழங்க முடிந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் ஆகியவற்றை அவர்கள் தெரிவித்தனர்.

உங்களால் உதவ முடிந்தால் Itsrainingraincoats பக்கத்தைப் தொடர்பு கொள்ளவும்.

வெளிநாட்டவரை “நாய்”..”உன் நாட்டுக்கு போ” என்று இன ரீதியாக தாக்கிய ஆடவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு