சிங்கப்பூரில் வேலையை தக்க வைக்க பணம்… சொந்த நாடு திரும்பிய அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள்!

(Photo: Roslan Rahman/AFP via Getty Images)

சிங்கப்பூரில் சுமார் 2,400 வெளிநாட்டு ஊழியர்கள் அல்லது  வேலையை தக்கவைக்க கிக்பேக் என்னும் சட்டத்திற்கு புறம்பான முறையில் பணம் வழங்கிய பாதி பேர் இங்கு தொடர்ந்து பணிபுரிகின்றனர், மீதமுள்ளவர்கள் தாயகம் திரும்ப முடிவு செய்தனர்.

இதனை மனிதவள மூத்த இணை அமைச்சர் கோ போ கூன் நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 1) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

S Pass, Employment Pass தகுதி சம்பள உயர்வு… வெளிநாட்டு ஊழியர்களின் கட்டாய சம்பள உயர்வுக்கு வழிவகுக்குமா?

அதாவது 2016 மற்றும் 2020க்கு இடையில் மனிதவள அமைச்சகம் (MOM) விசாரணை செய்ததன் அடிப்படையில் அந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 20 சதவீதம் பேர் புதிய வேலைவாய்ப்பைக் பெற்றதாகவும், அதேசமயம் 30 சதவீதம் பேர் கிக்பேக் பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகும் தங்கள் முதலாளிகளுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் அவர் கூறினார்.

2016 மற்றும் 2020 க்கு இடையில் ஆண்டுதோறும் சராசரியாக 960 கிக்பேக் குற்றங்கள் குறித்து விசாரித்ததாகவும், மொத்தம் சுமார் 4,800 வழக்குகள் இது தொடர்பாக பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிக்பேக்

இதில் சராசரியாக, ஒரு முதலாளிக்கு ஐந்து வெளிநாட்டு ஊழியர்கள் என பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிக்பேக் என்னும் சட்டத்திற்கு புறம்பான பணம் என்பது வழக்கமாக முதலாளிகள் மேற்கொள்ளும் நரி தந்திர செயலாகும்.

இந்த பணம், நிபந்தனையாகவோ அல்லது வேலைவாய்ப்புக்கான உத்தரவாதமாகவோ வெளிநாட்டு ஊழியர்களிடம் மிரட்டி பறிக்கப்படும்.

இதில்,” S$1,000 முதல் S$3,000 வரை கிக்பேக் பணம் வசூல் செய்யப்படலாம்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் என்ஜின் (PAP-Nee Soon) கேள்விகளுக்கு பதிலளித்த டாக்டர் கோ கூறினார்.

“ஊழியர்களை இதற்காக தொந்தரவு செய்யக்கூடாது!”… மீறினால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் MOM