வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, CPM துறைகள், Work permit, S Pass ஊழியர்களுக்கு ஏப். 1 முதல் இது கட்டாயம்!

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இன்று ஏப்ரல் 1 முதல் எவையெல்லாம் மாற்றம் அல்லது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான முதன்மை பராமரிப்புத் திட்டத்தை (Primary care plan) முதலாளிகள் கட்டாயம் வாங்க வேண்டும்.

இது ஊழியர்களின் Work pass அனுமதிக்கான தேவைகளின் ஒரு பகுதியாக இனி இருக்கும்.

சிங்கப்பூரில் இன்று ஏப். 1 முதல் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் நுழைவு அனுமதி தேவை இல்லை – Travel update

யார் யாருக்கு பொருந்தும்?

தங்கும் விடுதிகளில் வசிக்கும் Work permit மற்றும் S Pass அனுமதி வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும்.

கட்டுமானம், கடல் தளம் மற்றும் செயல்முறைத் துறைகளில் (CMP) பணிபுரிபவர்களுக்கும் இது பொருந்தும்.

புதிதாக வந்துள்ள தகுதியுடைய வெளிநாட்டு ஊழியர்களின் முதலாளிகள், அல்லது work pass அனுமதிச் சீட்டைப் புதுப்பிக்கும் அல்லது முதலாளிகளை மாற்றும் ஊழியர்கள், புதிய work pass அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுவதற்கு முன் இந்த திட்டத்தை வாங்க வேண்டும்.

இதில் work pass அனுமதி விண்ணப்பத்திற்கான “மருத்துவப் பரிசோதனைகள் அல்லது புதுப்பித்தல், கடுமையான அல்லது நாள்பட்ட மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள்” ஆகியவற்றை இது உள்ளடக்கும்.

இதையும் படிங்க

ஏப்ரல் 1 முதல், வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிமுறைகள் அதிரடி தளர்வு – என்னென்ன? வாங்க பார்ப்போம்!

சிங்கப்பூரில் பணிபுரியும் “இந்திய பாஸ்போர்ட்” வைத்திருப்பவர்களுக்கு சுற்றுலா விசா சேவையை தொடங்கியது மலேசியா!