பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற பதில்!

Singapore dormitory new COVID-19
(Photo: ROSLAN RAHMAN/AFP via Getty Images)

கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட ஊழியர்கள் குணமடையும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சொந்த நாட்டுக்கு செல்லவிருந்த அன்றைய தினமே விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்!

தங்கும் விடுதிகளில் வசித்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டால் எங்கே சிகிச்சை பெற்று குணமடைகின்றனர் என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்தது.

அதற்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பதிலளித்தார், அப்போது தங்கும் விடுதிகளில் வசித்துவரும் வெளிநாட்டு ஊழியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் அவர்கள் குணமடைவதாக கூறினார்.

லேசான அறிகுறி அல்லது அறிகுறி ஏதும் இல்லாமல் பாதிக்கப்படும் முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் அரசாங்க ஏற்பாட்டு இடங்களில் குணமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீவீர சிகிச்சை தேவைப்படும் அதிக ஆபத்தில் இருக்கும் ஊழியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வேலைல இருக்கணும்னா இத செய்”… 1 முதலாளிக்கு 5 வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்பு – 100 முதலாளிகளுக்கு செக்!