SG Clean Day: 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் குப்பைகளை ஊழியர்களே சுத்தப்படுத்த ஊக்குவிப்பு

Photo: TODAY

SG துப்புரவு தினத்தின் (SG Clean Day) ஒரு பகுதியாக, சிங்கப்பூரிலுள்ள நான்கு தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் சொந்த குப்பைகளை தாங்களே சுத்தப்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

சிங்கப்பூர் லிமிடெட் (DASL) டார்மிட்டரி அசோசியேஷன் உடன் இணைந்து பொது சுகாதார மன்றம் (PHC) நேற்று (ஜனவரி 23) இதனை அறிவித்தது. 2022ஆம் ஆண்டின் முதலாவது SG துப்புரவு தினத்தைத் தொடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.

சிங்கப்பூரில் இருந்து செல்லும் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி இனி இந்த பகுதிகளுக்கு செல்லலாம்

நான்கு தங்கும் விடுதிகள்:

  • காக்கி புக்கிட்டில் உள்ள ஹோம்ஸ்டே லாட்ஜ்
  • S11 Dormitory@Punggol
  • அட்மிரால்டி ரோடு வெஸ்டில் உள்ள Cochrane லாட்ஜ் 2
  • சிலேத்தர் நார்த் பகுதியில் உள்ள Tee Up dormitory

மேற்கண்ட நான்கு தங்கும் விடுதிகளிலும் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை துப்புரவு பணிகள் இருக்காது என்று கூறப்பட்டது.

முன்னதாக, பொது பூங்காக்கள், தோட்டங்கள், பூங்கா இணைப்புகள், திறந்த பகுதிகள் மற்றும் வீட்டு மனைகளின் தரைகளில் மட்டுமே SG துப்புரவு தினம் செயல்படுத்தப்பட்டது.

தங்கும் விடுதி குடியிருப்பாளர்கள் தங்கள் குப்பைகளை சுத்தம் செய்வது, அவர்கள் வசிக்கும் வளாகத்தை சுத்தமாக வைக்க உரிமையையும் தனிப்பட்ட பொறுப்பையும் எடுத்துக்கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாக இந்த விரிவாக்கம் கொண்டுள்ளது என்று PHC அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிலோசோ கடற்கரையில் பெண்களை தவறாக ரகசிய படம் எடுத்து சிக்கிய ஆடவர்.. கொந்தளித்த பெண்கள்!