வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் கரகாட்டம், சமையல் என கலக்கும் இந்திய ஊழியர்கள்!

Migrant workers showcase skills for talent competition

வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில், ஊழியர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரில் நடைபெறும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான திறன் போட்டியில் முதலிடத்திற்கு போட்டியிடும், இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 நபர்களில் ஒருவர் திரு மருதையன் குமாரவேலு.

சிங்கப்பூரில் பணிபுரியும் மருதையன் குமாரவேலு (வயது 35) தனது தாய் சமையலைப் பார்த்து வளர்ந்தவர்.

அவர் தனது 7 வயதில் இருந்து சமைப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார், சமையலறையில் தனது அம்மாக்கு உதவி செய்தும் வந்தவர்.

அவர் கல்லூரிக்குச் சென்றபின் சமைப்பதை விட்டுவிட்டார். ஆனால், வேலைக்காக சிங்கப்பூர் வந்தபின் சமைப்பதில் அவர் கொண்ட ஆர்வம் மீண்டும் எழுந்தது.

குறிப்பிட்டு சொல்லப்போனால், கடந்த நான்கு ஆண்டுகளில், அவர் தனது அறை நண்பர்களிடையே சமையல் வல்லுநர் ஆகிவிட்டார். அவர்கள் அனைவரும் அவருடைய சமையலுக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.

பெரும்பாலும் பிரியாணி, மற்றும் நண்டு அல்லது கோழி கறி போன்ற உணவுகளை சிறப்பாக சமைக்கும் அவர், குறிப்பாக தீபாவளி போன்ற சிறப்பு பண்டிகைகளில் தனது சமையல் திறமையை சிறப்பாக காட்டுவர். தற்போது இந்த போட்டியில் மீன் சமைப்பதை அவர் வெளியிட்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாது, திரு விக்னேஷ் சதீஷ் என்ற ஊழியர் கரகாட்டம் என்று அழைக்கப்படும் தமிழ் பாரம்பரிய நடனம் மேற்கொண்ட காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், ஊழியர்கள் பலர் தங்களின் திறமைகளை இந்த போட்டியின் வாயிலாக வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த போட்டி, தமிழ் மொழி தொடரான ​​” சில் பன்னு மாப்பி! ” இன் ஒரு பகுதியாகும், இது தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.

இந்தத் தொடர் சிங்கப்பூரில் குடியேறிய வெளிநாட்டு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டது, இறுதி அத்தியாயம் இன்று இரவு (ஜூலை 5) ஒளிபரப்பாகிறது.

இந்த போட்டிக்கு பரிசுகள் வழங்கப்படும். இதனை திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்க உள்ளார்.