சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் ஊழியர்களுக்கு..! குழந்தைகளுக்கு கல்வி உதவி, ஊழியர்கள் இறந்தால் உதவி என அனைத்து உதவிகளும்…

migrant workers tamils-welfare-board helping
(Photo: Today)

வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் ஊழியர்களின் நலனுக்காக தொடங்கப்பட்டது தான் “புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்”.

இந்நிலையில், அதற்கான தலைவர் மற்றும் வாரியத்தின் உறுப்பினர்கள் நியமனம் குறித்த ஆணைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதில் சிங்கப்பூரில் உள்ள ஜி.வி. ராம் என்ற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன் என்பவர் இந்த நல வாரியத்தின் அரசு சாரா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சாங்கி விமான நிலையம் வரும் பயணிகளின் கனிவான கவனத்திற்கு!

அவரோடு சேர்த்து பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் பதவி காலம் 3 ஆண்டுகள் வரை இருக்கும், தமிழக அரசின் 5 கோடி ரூபாய் நிதியை கொண்டு இந்த நல வாரியம் அமையப்பட்டுள்ளது.

இவ்வாரியத்தின் மூலமாக சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஊழியர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்ட உள்ளது.

இதன் மூலமாக குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்கள் இறந்தாலோ, விபத்தில் சிக்கினாலோ அவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்யப்படும்.

இதில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்பீடு திட்டம், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம், மேலும் அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும்.

கூடுதலாக ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, மேலும் வசதி இல்லாத ஊழியர்களுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியரின் கடும் உழைப்பு: இரு நாட்களில் S$865 வருமானம்… “எல்லாம் ஈசி தான்” – கெத்து காட்டும் ஊழியர்