“யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர்” தீம் பார்க்கிற்கு சென்ற 120 வெளிநாட்டு ஊழியர்கள் – செம்ம என்ஜாய்!

migrant workers theme park
AGWO

கிறிஸ்மஸ் உற்சாகத்தை பரப்பும் நோக்கில், 120 வெளிநாட்டு ஊழியர்கள் முதல் முறையாக ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர் (USS) தீம் பார்க்கிற்கு சனிக்கிழமை (டிசம்பர் 25) அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸின் (Hope Initiative Alliance) இயக்கமான AGWO அவர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை

AGWO மற்றும் அதன் கூட்டாளிகளின் கூடுதல் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் சில ஊழியர்கள் பயனடைந்தனர்.

“சிங்கப்பூரில் உள்ள பல கட்டிடங்கள் மற்றும் இடங்களைக் கட்டியமைக்க புலம்பெயர்ந்த ஊழியர்கள் உதவினர்” என்று AGWO செய்தித் தொடர்பாளர் கூறினார்.

ஆனால், “கூடுதல் முயற்சி செய்து கட்டிய சுற்றுலா தலங்கள் உட்பட்ட இடங்களை அவர்கள் பார்வையிட வாய்ப்பு ஏற்படுவதில்லை” என்று AGWO செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஆடவருக்கு சிறை