வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு….. டிக்டாக்கில் வீடியோவைப் பதிவேற்றுங்கள்… பரிசுகளை வெல்லுங்கள்!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு..... டிக்டாக்கில் வீடியோவைப் பதிவேற்றுங்கள்... பரிசுகளை வெல்லுங்கள்!
Photo: Migrant Workers' Centre

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Workers’ Centre) என்ற அரசு சாரா அமைப்பு, ‘டிக்டாக் சேலஞ்ச் 2023’ (TikTok Challenge 2023) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

சிங்கப்பூருக்கு வருகிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

இது குறித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் இல்ல பணிப்பெண்கள் ‘டிக்டாக் சேலஞ்ச் 2023’: என்னால் மோசடிகளுக்கு எதிராக செயல்பட முடியும்.

மோசடிகளுக்கு எதிரான ஒரு நிமிட டிக்டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்களைக் கொண்டு உங்கள் வீடியோக்களை ஷேர் மற்றும் லைக் செய்திடுங்கள். அக்டோபர் 15- ஆம் தேதி முதல் நவம்பர் 15- ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு..... டிக்டாக்கில் வீடியோவைப் பதிவேற்றுங்கள்... பரிசுகளை வெல்லுங்கள்!
Photo: Migrant Workers’ Centre

முதலிடம் பிடிப்பவர்களுக்கு 3,000 சிங்கப்பூர் டாலரும், இரண்டாமிடம் பிடிப்பவர்களுக்கு 1,500 சிங்கப்பூர் டாலரும், மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு 1,000 சிங்கப்பூர் டாலரும், நான்கு முதல் பத்து இடங்கள் பிடிப்பவர்களுக்கு 500 சிங்கப்பூர் டாலரும் பரிசாக வழங்கப்படும்.

இந்திய பிரதமரைச் சந்தித்து பேசிய சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகர்!

வீடியோவை டிக்டாக்கில் பதிவிடுவது குறித்து பார்ப்போம். உங்களது சக பணியாளர்கள் மோசடியில் இருந்து தங்களைத் தவிர்த்துக் கொள்ள ஏதுவான விழிப்புணர்வைப் பரப்பும் வகையிலான ஒரு நிமிட வீடியோவைப் பதிவுச் செய்யவும், இதை தனி நபராக அல்லது ஒரு குழுவாகப் பதிவுச் செய்யலாம்.

உங்களது வீடியோவில் ‘என்னால் மோசடிகளுக்கு எதிராக செயல்பட முடியும்’ என்ற ஸ்லோகனைச் சேர்க்க வேண்டும். #ICanACTAgainstScamsVC23 என்ற ஹேஷ்டேக் உடன் உங்களது வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்ய முடியும். உங்களது வீடியோவை பொதுமக்கள் காணும் வகையில் அமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.