வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் ஊழியர்கள் இனி விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி

(PHOTO: Roslan Rahman / AFP)

தங்கும் விடுதிகளில் வசிக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த புதிய அறிவிப்பு வரும் டிசம்பர் 3 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமை இல்லா பயணத்தை தொடங்கும் சிங்கப்பூர்

இதன் மூலம் வாரத்திற்கு சுமார் 21,000 ஊழியர்கள் வெளியே சென்றுவர முடியும், தற்போது வரை வாரத்திற்கு 3,000 ஊழியர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள் லிட்டில் இந்தியா அல்லது கெயிலாங் செராய்க்கு மட்டும் செல்லவேண்டிய கட்டுப்பாடுகள் இனி இல்லை, அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர்களும் இங்குள்ள பொழுதுபோக்கு நிலையங்களுக்கு தினசரி செல்லலாம். தற்போது வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொழுதுபோக்கு நிலைய வருகை கால அளவு, தற்போதுள்ள நான்கு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரமாக நீட்டிக்கப்படும்.

டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து, எட்டு பொழுதுபோக்கு நிலையங்களில் எங்கு வேண்டுமானாலும் ஊழியர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இன்று (நவம்பர் 15) கோவிட்-19 அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சிங்கப்பூர்-தமிழ்நாடு போதுமான விமான சேவை இல்லை: கடும் அவதிக்குள்ளாகும் பயணிகள்