Work Permit வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR, குடியுரிமை வழங்கப்படுவதில்லை ஏன்? ஒதுக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்.. அடுக்கடுக்கான கேள்விகள்

Migrant workers vital to Singapore economy
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14 அன்று “Reinventing Destiny IPS” என்ற மாநாடு நடந்தது, அதில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொண்டு பேசினார்.

அதில் அவரிடம் வெளிநாட்டு ஊழியர்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

சாங்கி விமான நிலையத்தில் போர்டிங் பாஸை தவறாகப் பயன்படுத்திய ஆடவர் கைது

அவர்கள் குறித்து பதிலளித்த வோங், வெளிநாட்டு ஊழியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த அரசாங்கம் அதனால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறினார்.

ஆனால், சிங்கப்பூர் சமூகத்தில் நிரந்தர அடிப்படையில் ஊழியர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சிங்கப்பூர் வாழ்க்கையை ஒற்றுமையுடன் தழுவிக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பைக் உறுதி செய்யமுடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 தொற்றுநோய் காலகட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்த வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளின் நிலைமைகள் குறித்து ராஃபிள்ஸ் நிறுவன மாணவர் ஒருவரிடம் இருந்து கேள்வி எழுந்தது.

மாணவர் பார்வையில், வெளிநாட்டு ஊழியர்கள் இன்னும் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை ஒருங்கிணைக்க இன்னும் மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அவர் பேசினார்.

தற்போதைய Work permit வேலை அனுமதி முறையானது, வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரர்களுடன் தொடர்பு கொள்வதற்குத் தடையாக இருப்பதாக உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டு ஊழியர்களை சார்ந்தவர்களைக் இங்கு கொண்டு வருவதிலிருந்தோ அல்லது நிரந்தர வாசம் அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பிப்பதையோ தடுக்கும் சட்டங்கள், அவர்கள் வெறுமனவே ஊழியர்கள் என்ற கருத்தை வலியுறுத்துவதாக மாணவர் கூறினார்.

துணை பிரதமரின் பதில்

கோவிட் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் செய்த தியாகங்களையும், குடியிருப்புகள் முதல் துறைமுகங்களில் பணிபுரிவது வரை சிங்கப்பூரைக் கட்டியெழுப்ப அவர்கள் செய்த பங்களிப்புகளையும் வோங் நினைவு கூர்ந்தார்.

சிங்கப்பூரின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான பங்கு அவர்களுக்கு உண்டு என்பதை முதலில் நன்றியாக வெளிப்படுத்தினார் வோங்.

“எனவே, வெளிநாட்டு ஊழியர்கள் குறிப்பாக Work permit வைத்திருப்பவர்கள் இங்கு பாதுகாப்பாக வேலை செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், அவர்களுக்கு சிங்கப்பூரில் நல்ல வாழ்க்கை சூழல் இருப்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார் அவர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரங்கள் உயர்த்தப்பட்டது குறித்தும் அவர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் நிரந்தரவாசிகளாக மாறினால் அல்லது அவர்களைச் சார்ந்தவர்களைக் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தால் சவால்கள் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார், மேலும் அவர்கள் அனைவரையும் நம் சமூகத்தில் ஒருங்கிணைக்க முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சமநிலையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதன் மத்தியில் வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர் என்றும், சிங்கப்பூர் அவர்களை வரவேற்பதாகவும் வோங் கூறினார்.

ஆனால் ஒர்க் பெர்மிட் அனுமதி முதல் E பாஸ் அனுமதி வரையுள்ள வெளிநாட்டு ஊழியர்களில் ஒரு சிறிய குழுவினருக்கு PR ஆகவும், இறுதியில் நாட்டின் குடிமக்களாகவும் மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் – சான்றிதழ்கள் வழங்கல்