புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கவனத்திற்கு… புகைப்படங்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றுங்கள்… ‘NTUC FairPrice’ வவுச்சர்களை வெல்லுங்கள்!

Photo: Migrant Workers' Centre Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புகைப்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையம் (Migrant Worker’s Centre- ‘MWC’) மற்றும் என்டியூசி (NTUC).

சிங்கப்பூர் வருகிறார் நியூசிலாந்து பிரதமர்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே 1- ஆம் தேதி அன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சிங்கப்பூரில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வித்தியாசமான புகைப்படப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்க விரும்பும் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் உங்களுக்கு பிடித்த இடத்திலோ, உங்களுக்கு நெருங்கிய அல்லது பிடித்த நண்பர்க்ளுடன் இருக்கும்போதோ, நீங்கள் விரும்பும் உணவுகளை அருந்தும்போதோ செல்ஃபி புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அந்த புகைப்படத்தை உங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி, எடுக்கப்பட்ட புகைப்படம் குறித்தும், அந்த தருணம் எப்படி இருந்தது என்பது குறித்தும் விரிவாக எழுத வேண்டும். அதைத் தொடர்ந்து, #NTUCMDMW22 என்ற ஹேஸ்டேக்குடன் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். வரும் ஏப்ரல் 30- ஆம் தேதியுடன் போட்டி நிறைவடைகிறது. இன்றே உங்கள் புகைப்படங்களைப் பதிவேற்ற தொடங்குங்கள்.

குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. முகம் சுளித்த தமிழர்கள் – சமூக பொறுப்பு முக்கியம்

இப்போட்டியில் வெற்றி பெறும் 50 அதிஷ்டசாலிகளுக்கு மொத்தம் 6,000 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ‘NTUC FairPrice’ வவுச்சர்கள் வழங்கப்படும். மே மாதத்தின் நடுப்பகுதியில் வெற்றியாளர்கள் ஃபேஸ்புக் பக்கம் மூலம் தொடர்பு கொள்ளப்படுவார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மையத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மே 29- ஆம் தேதி அன்று இரவு 07.30 PM மணிக்கு எங்களின் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படும். அந்த நிகழ்ச்சியை அனைவரும் காணுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.” இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.