கத்தார் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான்!

Photo: Wikipedia

சிங்கப்பூர் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் அரசுமுறை சுற்றுப்பயணமாக இன்று (25/03/2022) கத்தார் நாட்டிற்கு செல்கிறார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்.!

இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் பிரதமர் அலுவலக அமைச்சரும், வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சரும் மற்றும் இரண்டாவது கல்வி அமைச்சருமான டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் (Minister in the Prime Minister’s Office, Second Minister for Foreign Affairs and Second Minister for Education, Dr Mohamad Maliki Osman), 20- வது தோஹா கூட்டத்தில் (20th Doha Forum) கலந்துக் கொள்வதற்காக, இன்று (25/03/2022) முதல் வரும் மார்ச் 28- ஆம் தேதி வரை கத்தார் நாட்டிற்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். குழு அமர்வில் பங்கேற்கும் அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மான் உரையாற்றவிருக்கிறார். மேலும், கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்த சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்!

அமைச்சர் டாக்டர் முகமது மாலிகி ஒஸ்மானுடன், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் கத்தாருக்கு செல்லவுள்ளனர்.