சுவிட்சர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் இக்னாசியோ காசிஸின் (Swiss President Ignacio Cassis) அழைப்பின் பேரில் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ‘GESDA’ உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவுக்கு அக்டோபர் 12- ஆம் தேதி முதல் மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் வழியாக பாலிக்கு விமான சேவையை வழங்கி வரும் ஸ்கூட் நிறுவனம்!

இன்று (14/10/2022) நடைபெறவுள்ள ‘GESDA’- வின் உயர்மட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள அமைச்ச டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர், உலக சுகாதார அமைப்பின் தலைவர், செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் (UN High Commissioner for Refugees) உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

இந்திய கைத்தறி குறித்த சிறப்பு பேஷன் ஷோ, கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சிங்கப்பூர் அமைச்சர் நாடு திரும்புகிறார். இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.