அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.

கோடைக்கால விடுமுறை: திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் விடுத்த அழைப்பையேற்று, டெல்லியில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, மார்ச் 1- ஆம் தேதி அன்று இந்தியாவுக்கு செல்கிறார்.

உணவு மற்றும் எரிசக்தித் துறை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் மற்றும் சிக்கலான புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் பலதரப்பு மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விவாதிப்பார்கள்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துப் பேசிய ‘லிஷா’ அமைப்பினர்!

மார்ச் 3- ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர், வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், கல்வி, திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரைத் தனித்தனியே சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்”. இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.