அரசுமுறைப் பயணமாக கியூபா சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Singapore Foreign Minister Vivian Balakrishnan

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஏப்ரல் 16- ஆம் தேதி முதல் ஏப்ரல் 18- ஆம் தேதி வரை பிரேசில் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு அந்நாட்டு தலைவர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா நடைபெறும் என அறிவிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று கியூபா நாட்டிற்கு சென்றுள்ளார். வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவர், ஹவானாவில் (Havana) கியூபாவின் அதிபர் மிகுவல் டியாஸ் கேனலை (President Miguel Díaz-Canel) நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, துணைப் பிரதமரும், பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சருமான அலெஜான்ட்ரோ கில் பெர்னாண்டஸ் (Deputy Prime Minister and Minister of Economy and Planning Alejandro Gíl Fernandez) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் பாரில்லா (Minister of Foreign Affairs Bruno Rodríguez Parrilla) ஆகியோரையும் தனித்தனியே சந்தித்துப் பேசவிருக்கிறார்.

சிங்கப்பூரில் நிகழ்ந்த அரிய சூரிய கிரகணத்தைப் பார்த்து வரும் மக்கள்!

சிங்கப்பூர்- கியூபா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம், வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்டவைக் குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் அந்த அமைச்சத்தின் அதிகாரிகளும் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்”. இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.