அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் மலேசியாவுக்கு செல்கிறார்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter Page

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) இன்று (14/01/2023) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நான்கு நாள் அரசுமுறை பயணமாக, நாளை (15/01/2023) மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு செல்கிறார்.

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சிங்கப்பூர் துணைத் தூதர் சந்திப்பு!

ஜனவரி 18- ஆம் தேதி வரை மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம், சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் நெருங்கிய உறவுகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும், புதிய மலேசிய அரசாங்கத்துடன் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர், பொருளியல்துறை அமைச்சர், சுற்றுசூழல்துறை அமைச்சர் மற்றும் மலேசியா நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

“இந்தப் பாரம்பரிய அறுவடைத் திருவிழா தமிழ்நாட்டில் தோன்றியது”- பொங்கல் தின வாழ்த்துத் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்!

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் மலேசியாவுக்கு செல்லவிருக்கின்றனர்”. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.