ஐந்து நாள் பயணமாக மலேசியாவுக்கு செல்லும் சிங்கப்பூர் அமைச்சர்!

Photo: Wikipedia

சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறைக்கான இரண்டாவது அமைச்சரும், கல்விக்கான இரண்டாவது அமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஒஸ்மான், இன்று (ஏப்ரல் 15) முதல் ஏப்ரல் 19- ஆம் தேதி வரை ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியாவுக்கு செல்கிறார்.

சிங்கப்பூர் செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி- சி55 ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

மலேசியா நாட்டின் கிளந்தான் (Kelantan) மற்றும் தெரெங்கானு (Terengganu) ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், மலேசியா மன்னர், மாநில தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். மலேசியா தெரெங்கானு பல்கலைக்கழகத்தில் (Universiti Malaysia Terengganu) உள்ளூர் மாணவர்களையும் அவர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

மலேசியா நாட்டின் மாநிலங்களுடன் தொடரும் நீண்டகால உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமையும் என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சூரிய கிரஹணம்: இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பூர் அமைச்சருடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகளும் மலேசியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.