ஸ்வீடனுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

 

 

ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோபியாஸ் பில்ஸ்ட்ரோம் (Minister for Foreign Affairs of Sweden Tobias Billström) மற்றும் ஐரோப்பிய யூனியன் உயர் அதிகாரிகளின் அழைப்பின் பேரில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (Minister for Foreign Affairs Dr Vivian Balakrishnan), மே 12- ஆம் தேதி முதல் மே 14- ஆம் தேதி வரை ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோம் (Stockholm) நகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

S$400 வெள்ளி கொடுக்கும் சிங்கப்பூர் அரசு… நீங்கள் தகுதியுடையவரா? செக் பண்ணிக்கோங்க

அங்கு நடைபெறவுள்ள இரண்டாவது இந்தோ- பசிபிக் அமைச்சர்கள் கூட்டத்தில் (2nd Indo-Pacific Ministerial Forum- ‘IPMF’) கலந்து கொள்ளவுள்ளார். கூட்டத்தில், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள், பருவநிலை மாற்றம், டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவைக் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

அத்துடன் , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்களை தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ChatGPT பயன்படுத்தி வென்று ஆச்சரியப்படுத்திய ஆடவர்

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன், அதிகாரிகளும் ஸ்வீடனுக்கு செல்லவிருக்கின்றனர். இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.