அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

Photo: Minister Vivian Balakrishnan Official Twitter page

 

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஜூன் 14- ஆம் தேதி முதல் ஜூன் 20- ஆம் தேதி வரை ஏழு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

வெளிநாட்டில் ஏற்பட்ட விபத்து – மோட்டார் சைக்கிளில் சென்ற சிங்கப்பூரர் மரணம்

வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுகிறார். சிங்கப்பூருக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் சுற்றுப்பயணம் வலுச்சேர்க்கும்.

லிட்டில் இந்தியாவில் புல்வெளியில் தவித்த இந்தியர்கள் – விசிட்டிங் வந்தவர்கள் அவதி

அதைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில் நடைபெறும் கடல் உயிரியல் பாதுகாப்பு குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் (United Nations Secretary-General Antonio Guterres), ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது கூட்டத்தொடரின் தலைவர் சபா கோரோசி (President of the 77th session of the UN General Assembly Csaba Kőrösi) ஆகியோரையும் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.